ADDED : மார் 17, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டி ஆதிநாராயணன் 52. மருது சேனை அமைப்பின் தலைவர். 2 நாட்களுக்கு முன் இவர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இவ்வழக்கை உரிய முறையில் விசாரிக்கவில்லை எனக் கூறி அன்று கப்பலுார் டோல்கேட்டை தனது ஆதரவாளர்களோடு முற்றுகையிட்டார்.
ஆதிநாராயணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள டோல்கேட் தடுப்புகள், சென்சார் கருவிகளை சேதப்படுத்தியதாகவும், ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் திட்ட மேலாளர் மது புகாரில் ஆதிநாராயணன், அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

