/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திண்டுக்கல் அறங்காவலர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு
/
திண்டுக்கல் அறங்காவலர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு
திண்டுக்கல் அறங்காவலர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு
திண்டுக்கல் அறங்காவலர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு
ADDED : அக் 28, 2025 05:05 AM
மதுரை: கோயில் அறங்காவலர்களாக அரசியல் கட்சி நிர்வாகிகளை நியமித்ததற்கு எதிரான வழக்கில் விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோயில் அறங்காவலர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் தி.மு.க., நிர்வாகிகள். அரசியல் சார்புள்ளவர்களை அறங்காவலர்களாக நியமிக்கக்கூடாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆஜரானார். கோயில் நிர்வாகம், மாநில சுற்றுலாத்துறை முதன்மை செயலர், அறங்காவலர்களாக தேர்வானவர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவ., 26 க்கு ஒத்திவைத்தனர்.