/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
லியோ படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
/
லியோ படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
ADDED : ஜன 22, 2025 05:52 AM
மதுரை 'லியோ' பட இயக்குனர் மீது வழக்குப் பதிய உத்தரவிடக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரை ராஜா முருகன் தாக்கல் செய்த பொதுநல மனு:
நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'லியோ' படம் 2023ல் வெளியானது. இதில் வன்முறையை துாண்டும் வகையில் காட்சிகள் உள்ளது. இதை தவிர்க்க திரைப்பட தணிக்கை வாரியம் புது விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
இளைய தலைமுறையினர் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். 'லியோ' படத்தை எந்த ஒரு ஊடகத்திலும் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் மீது வழக்குப் பதிய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.