UPDATED : நவ 13, 2026 10:26 PM
ADDED : நவ 13, 2026 10:26 PM
மதுரை: மதுரை பதிவு மாவட்ட பத்திரம் எழுதுவோர் சங்கம் தலைவர் ராஜமாணிக்கம்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கிருந்தும் ஆவணங்களை பதிவு செய்யலாம். காகிதமற்ற பதிவுமுறையை செயல்படுத்தும் நோக்கில் பதிவுத்துறையில் மாதிரி பதிவு மையங்கள் (எம்.ஆர்.எச்.,) அமைக்க இ-டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 5 பத்திரப்பதிவு அலுவலங்களில், அடுத்தகட்டமாக 20 அலுவலகங்களில் விரிவுபடுத்தப்படும். இதனால் உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். தனியாரிடம் பணியை ஒப்படைத்தால் போலி ஆவணங்கள் உருவாக வாய்ப்புள்ளது. டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜரானார். நீதிபதி பதிவுத்துறை செயலர், ஐ.ஜி., பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு நவ.25 க்கு ஒத்திவைத்தார்.
