/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊராட்சி அலுவலகத்தை மாற்றுவதற்கு எதிராக வழக்கு
/
ஊராட்சி அலுவலகத்தை மாற்றுவதற்கு எதிராக வழக்கு
ADDED : டிச 06, 2024 05:49 AM
மதுரை: பேரையூர் அருகே செம்பரணியை சேர்ந்தவர் சின்னத்தேவர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
செம்பரணி ஊராட்சி அலுவலகம் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அது பழுதடைந்ததால் 2022 ல் இடிந்து விழுந்தது. செம்பரணியில் ரூ.30 லட்சத்தில் புது அலுவலகம் அமைக்க கலெக்டர் அனுமதி வழங்கினார். எஸ்.சென்னம்பட்டியில் ஊராட்சித் தலைவர் வசிக்கிறார். அங்கு தற்காலிக ஊராட்சி அலுவலகம் செயல்படுகிறது. அங்கு புது அலுவலகம் அமைக்க தலைவர் முயற்சிக்கிறார். இது கலெக்டரின்உத்தரவு, மக்கள் நலனிற்கு எதிரானது.
செம்பரணியில் அலுவலகம் அமைக்க வலியுறுத்தி கலெக்டர், சேடபட்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை அதிகாரிகள் 3 மாதங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.