ADDED : ஜூலை 05, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தேனி உத்தமபாளையம் கார்த்திக் செல்வன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தேனி அரசு மருத்துவமனை டாக்டர் சொப்னா ஜோதி. அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் தனக்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு வருமாறு கூறுகிறார். அரசு மருத்துவமனையிலிருந்து மருந்துகளை எடுத்துச் செல்கிறார். வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். விசாரணை கோரி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு புகார் அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கருப்பசாமிபாண்டியன் ஆஜரானார். நீதிபதிகள் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், தேனி டி.எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரங்கள் ஒத்திவைத்தனர்.