ADDED : பிப் 01, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் - ராஜபாளையம் ரோட்டை நான்கு வழிச்சாலையாக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் ஆலம்பட்டி பகுதியில் சேடப்பட்டி பிரிவில் மேம்பாலம் அமைகிறது. ஆலம்பட்டி ஊருக்குள் பாலத்தின் ஆரம்பம் இருப்பதால் ரோட்டை கடந்து செல்வது சிரமம். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டனர். இதில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமாரும் பங்கேற்றார். அனைவரும் கைது செய்யப்பட்டனர். உதயகுமார் உட்பட 86 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.