/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வி.ஏ.ஓ., அலுவலக மாற்றத்திற்கு எதிராக வழக்கு
/
வி.ஏ.ஓ., அலுவலக மாற்றத்திற்கு எதிராக வழக்கு
ADDED : செப் 21, 2025 05:34 AM
மதுரை: தென்காசி மாவட்டம் கோட்டையூர் சுரேஷ்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
கோட்டையூர் ஊராட்சி ஆத்துவழி ஊராட்சி அலுவல பகுதியில் 35 ஆண்டுகளாக வி.ஏ.ஓ.,அலுவலகம் செயல்படுகிறது. 2024ல் நாரணபுரம் தேசியம்பட்டி ஊராட்சியில் வி.ஏ.ஓ.அலுவலகம் துவக்கப்பட்டது. அங்கு மாற்றினால் எங்கள் பகுதி மக்களுக்கு அலைச்சல், ஏற்படும். எங்கள் ஊரில் அலுவலகம் செயல்பட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வெள்ளைச்சாமி ஆஜரானார்.
நீதிபதிகள் கலெக்டர், சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ.,பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஒத்திவைத்தனர்.