/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அண்ணாமலை, காடேஸ்வரா மீது 4 பிரிவுகளில் வழக்கு
/
அண்ணாமலை, காடேஸ்வரா மீது 4 பிரிவுகளில் வழக்கு
ADDED : ஜூலை 02, 2025 07:56 AM
மதுரை : மதுரையில் சில நாட்களுக்கு முன் ஹிந்துமுன்னணி சார்பில் முருகபக்தர்கள் மாநாடு நடந்தது. பல்வேறு தடைகளுக்குப்பின், நீதிமன்ற உத்தரவு மூலம் அனுமதி பெற்று நடந்த இம்மாநாட்டில் பல லட்சம் பேர் பங்கேற்றனர். ஹிந்து முன்னணி, பா.ஜ., உட்பட பல அமைப்புகள் இதில் பங்கேற்றன.
இந்நிலையில் இதில் பங்கேற்று பேசிய பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ஹிந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், நிர்வாகி செல்வக்குமார் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் மீது மதம், இனம் என பேசி பகைமையை உருவாக்குதல், மதஉணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் பேசுதல், மதரீதியாக புண்படுத்தி பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.