/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பட்டா கேட்டு பெண் ஆர்.டி.ஓ.,வுக்கு மிரட்டல் பா.ஜ., நிர்வாகி உட்பட மூவர் மீது வழக்கு

ADDED : ஏப் 15, 2025 06:33 AM
மதுரை: மதுரையில் இலவச பட்டா வழங்குவது குறித்து கள ஆய்வுக்கு சென்ற ஆர்.டி.ஓ., ஷாலினிக்கு மிரட்டல் விடுத்ததாக பா.ஜ., நிர்வாகி ஹரிசந்திரன் உட்பட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழக அளவில் 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் 50 ஆயிரம் பட்டாக்கள் வழங்க சர்வே எடுக்கும் பணி நடந்து வருகிறது. ஆனையூர் மந்தையம்மன் கோயில் பகுதியில் ஆர்.டி.ஓ., ஷாலினி தலைமையில் வருவாய்த்துறையினர் சர்வே எடுத்தனர்.
அப்போது அப்பகுதி பா.ஜ., கிழக்கு மாவட்ட முன்னாள் துணைத்தலைவர் ஹரிசந்திரன், அவரது மகன் ரூபேஷ், உறவினர் ஞானமணி ஆகியோர் 'குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும்' என்று வாக்குவாதம் செய்தனர்.
'விதிப்படிதான் கணக்கெடுப்பு நடத்த முடியும்' என ஆர்.டி.ஓ., தெரிவித்ததற்கு, 'நான் மாவட்ட செயலாளர். என்னை மீறி இங்கு எதுவும் நடக்காது' என ஹரிசந்திரன் உள்ளிட்டோர் மிரட்டல் விடுத்து பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதுதொடர்பாக வி.ஏ.ஓ., கோதை நாச்சியார் புகாரில் ஹரிசந்திரன் உட்பட மூவர் மீது கூடல்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.