/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில் நிலையத்தில்வசதி செய்ய வழக்கு
/
ரயில் நிலையத்தில்வசதி செய்ய வழக்கு
ADDED : ஜூன் 05, 2025 01:29 AM
மதுரை: மதுரை பிரகாசம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை ரயில் நிலைய பிளாட்பாரங்களில் போதிய இருக்கைகள், மின்விசிறிகள், மருந்தகங்கள், குடிநீர், சாதாரண பயணிகளுக்கு கேண்டீன் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
2023 ஆக. 26ல் பயணிகள் சிலர் சட்டவிரோதமாக காஸ் சிலிண்டர் பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டது. 9 பேர் இறந்தனர். 20 பேர் காயமடைந்தனர். அவசர சிகிச்சைக்கு உதவ மருத்துவ வசதி இல்லை. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு மனு அனுப்பினேன்.
நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு அடுத்தவாரம் ஒத்திவைத்தது.