/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விமான நிலையத்திற்கு நிலம் கையகம் மக்களை வெளியேற்றுவதற்கு எதிராக வழக்கு விசாரணை மாற்றம்
/
விமான நிலையத்திற்கு நிலம் கையகம் மக்களை வெளியேற்றுவதற்கு எதிராக வழக்கு விசாரணை மாற்றம்
விமான நிலையத்திற்கு நிலம் கையகம் மக்களை வெளியேற்றுவதற்கு எதிராக வழக்கு விசாரணை மாற்றம்
விமான நிலையத்திற்கு நிலம் கையகம் மக்களை வெளியேற்றுவதற்கு எதிராக வழக்கு விசாரணை மாற்றம்
ADDED : டிச 12, 2024 08:04 AM
மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சின்ன உடைப்பு மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக தாக்கலான மற்றொரு வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்விற்கு மாற்றி தனி நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை சின்ன உடைப்பு மலைராஜன் உட்பட 258 பேர் தாக்கல் செய்த மனு:மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக அயன்பாப்பாகுடியின் சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 2009 ல் மதிப்பீடு செய்யப்பட்டு வீடு, நிலத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டது. அது போதுமானதல்ல. சட்டம், விதிகளை பின்பற்றாமல் எங்களை வீடுகள், பிளாட்கள், பட்டா நிலத்திலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற அரசு தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளியேற்ற தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நவ.20 ல் நீதிபதி என்.மாலா: மனுதாரர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார். நேற்று இவ்வழக்கு அதே நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு: தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் (1997) சட்டப்படி கட்டாயப்படுத்தி வெளியேற்ற அரசு தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கு தடை விதிக்க வேண்டும். நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான இழப்பீடு வழங்குதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றத்திற்கு வழிவகை செய்யும் (2013) சட்டப்படி மறுவாழ்வுக்குரிய ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட வேண்டும் என தாக்கலான வழக்கை டிச.5ல் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
மனுதாரர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து டிச.19 க்கு ஒத்திவைத்தது.
இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: அத்துடன் சேர்த்து விசாரிக்க இவ்வழக்கும் இரு நீதிபதிகள் அமர்விற்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.