ADDED : செப் 25, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கிடாதிருக்கை சதீஷ். உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
முதுகுளத்துார், கடலாடி, கமுதி பகுதியிலுள்ள நீர்வரத்து கால்வாய்களை அரசு முறையாக பராமரிக்கவில்லை. புதர்கள் மண்டியுள்ளன. கண்மாய்களுக்கு நீர்வரத்து தடைபட்டுள்ளது.
விவசாயம் பாதித்துள்ளது. கால்வாய்களை துார்வார எங்கள் தொண்டு நிறுவனத்திற்கு அனுமதிக்க அரசுக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சுந்தர்மோகன் அமர்வு கலெக்டர், மதுரை நீர்வளத்துறை தலைமைப் பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்.30க்கு ஒத்திவைத்தது.