/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டி.எம்.கோர்ட் சந்திப்பில் பொதுக்கூட்டம் தடை கோரி வழக்கு
/
டி.எம்.கோர்ட் சந்திப்பில் பொதுக்கூட்டம் தடை கோரி வழக்கு
டி.எம்.கோர்ட் சந்திப்பில் பொதுக்கூட்டம் தடை கோரி வழக்கு
டி.எம்.கோர்ட் சந்திப்பில் பொதுக்கூட்டம் தடை கோரி வழக்கு
ADDED : செப் 16, 2025 04:29 AM
மதுரை: மதுரை டி.எம்.கோர்ட் சந்திப்பில் பொதுக் கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில், அனுமதி வழங்க உத்தரவு, வழிகாட்டுதல் இருந்தால் ஆவணம் தாக்கல் செய்ய அரசு தரப்பிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை கிங்ஸ்லி பிரபாகர் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை பாண்டிய வேளாளர் தெரு அருகே டி.எம்.கோர்ட் சந்திப்பில் அடிக்கடி அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. சாலையை மறித்து பந்தல், மேடை, கட்சிக் கொடிகள், ஒலி பெருக்கி அமைக்கின்றனர். இதை பொதுக் கூட்டம் நடத்தும் இடமாக அறிவித்து போலீசார் அனுமதியளிக்கின்றனர்.
அங்கு கூடலழகர் பெருமாள் கோயில் தேர் நிறுத்தப்பட்டுள்ளது. தேர் அருகில் மேடை, மறுபுறத்தில் ஜெனரேட்டர் அமைக்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் தேருக்கு பாதிப்பு ஏற்படும். சுவாமி ஊர்வலம் இவ்வழியாக நடைபெறுகிறது. குறுகிய, நெருக்கடியான இப்பகுதியில் பொதுக் கூட்டம் நடத்துவதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
வரும் காலங்களில் டி.எம்.கோர்ட் சந்திப்பு அல்லது அருகிலுள்ள பகுதியில் பொதுக் கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆனந்த பத்மநாபன் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அங்கு அனுமதி வழங்குவதற்கு உத்தரவு, வழிகாட்டுதல் இருந்தால் அதற்குரிய ஆவணத்தை கலெக்டர், போலீஸ் கமிஷனர் தரப்பில் செப்.23 ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.