/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சட்டவிதிகளை மீறி கட்டட வரைபட அனுமதியை ரத்து செய்ய கோரிய வழக்கு; நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலர் பதில் அளிக்க உத்தரவு

ADDED : ஏப் 22, 2025 05:51 AM
மதுரை : மனைப் பிரிவு வரைபடத்துக்கு சட்டவிரோதமாக வழங்கிய ஒப்புதலை ரத்து செய்ய கோரிய வழக்கில் தமிழக நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலர், மதுரை கலெக்டர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் அப்சல் அஹமது தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் புதிதாக வீடு, தொழில் கூடம் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு, தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் கட்டட விதிப்படி விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அதன்படி மதுரை நகர திட்டமிடல் உதவி இயக்குனர் அலுவலகத்தில் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் போது விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. பல்வேறு விண்ணப்பங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்படுகிறது.
மனைப்பிரிவு அருகே 3 அடி அகல வாய்க்கால், ஓடை, கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகள் இருந்தால் ஒரு மீட்டர் இடைவெளி விட்டும், 3 அடி அகலத்துக்கு மேல் இருந்தால் 10 அடி அகலம் இடைவெளி விட்டும் மனைப்பிரிவு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த விதிமுறைகள் மதுரை நகர திட்டமிடல் உதவி கமிஷனர் அலுவலகத்தில் பின்பற்றப்படுவதில்லை. விதிகளை பின்பற்றாமல் மனைப் பிரிவு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மதுரையில் நகர திட்டமிடல் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நகர திட்டமிடல் கட்டட விதிகளை முறையாக பின்பற்றி அனுமதி வழங்க உத்தரவிட்டு, சட்டவிரோதமாக வழங்கப்பட்ட மனைப்பிரிவு ஒப்புதல், வரைபட அனுமதிகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
நீதிபதி விவேக்குமார் சிங் முன் இம்மனு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலாளர், நகர் மற்றும் கிராம திட்டமிடல் இயக்குனர், மதுரை கலெக்டர், மதுரை நகர திட்டமிடல் உதவி இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.