/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாதாள சாக்கடை பணியை முடிக்க வழக்கு
/
பாதாள சாக்கடை பணியை முடிக்க வழக்கு
ADDED : டிச 11, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வழக்கறிஞர் மயில்வாகன ராஜேந்திரன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை சூர்யா நகர் விரிவாக்கம் மீனாட்சி அம்மன் நகர் 11 வது தெற்கு தெருவில் பாதாளச்சாக்கடை பணியை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்கவில்லை.
பணியை முறையாக மேற்கொள்ளவில்லை. ரோடு சேதமடைந்துள்ளது. விரைந்து முடித்து சாலை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு: தற்போதைய நிலை குறித்து மாநகராட்சி கமிஷனர், மண்டலம் 1 செயற்பொறியாளர் டிச.16ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

