ADDED : டிச 19, 2024 05:08 AM
மதுரை: மதுரை புதுார் கற்பக நகர் ஜெயப்பிரகாஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை கற்பக நகரில் உணவுப் பொருள் கடத்தல்தடுப்பு பிரிவு போலீசாரின்அலுவலகம் உள்ளது. ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக பறிமுதல் செய்யும் வாகனங்களை தெருக்களில் நிறுத்தி வைக்கின்றனர்.
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அவ்வாகனங்களில் மழை நீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. நோய்கள் பரவும் அபாயம்உள்ளது. உதிரி பாகங்கள்திருடு போகின்றன. தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை அகற்றக்கோரி போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: இவ்விவகாரத்தில்மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஜன.8ல் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.