/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருவாதவூர் அகதிகள் முகாமில் வசதி நிறைவேற்ற வழக்கு
/
திருவாதவூர் அகதிகள் முகாமில் வசதி நிறைவேற்ற வழக்கு
திருவாதவூர் அகதிகள் முகாமில் வசதி நிறைவேற்ற வழக்கு
திருவாதவூர் அகதிகள் முகாமில் வசதி நிறைவேற்ற வழக்கு
ADDED : ஜன 29, 2025 05:23 AM
மதுரை : மதுரை கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மேலுார் அருகே திருவாதவூரில் இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாம் உள்ளது.
வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்தில் வீடுகளில் நீர் கசிவு ஏற்படுகிறது. 2014ல் ஒரு வீடு இடிந்ததில் சிறுமி இறந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெருக்களில் ரோடு வசதி இல்லை. தெரு விளக்குகள் பழுதடைந்துள்ளன. ரோடு, தெரு விளக்கு வசதி செய்ய வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பறை தடுக்க கழிப்பறைகள் அமைக்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் கான்கிரீட் வீடுகள் அமைத்துத் தர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு கலெக்டர் பிப்.13ல் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.