/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சதுரகிரி கோயிலில் வசதிகள் நிறைவேற்ற வழக்கு
/
சதுரகிரி கோயிலில் வசதிகள் நிறைவேற்ற வழக்கு
ADDED : ஆக 23, 2025 05:44 AM
மதுரை : சதுரகிரி கோயிலில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
துாத்துக்குடி ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் விழாக்காலங்களில் அதிக பக்தர்கள் வருகின்றனர். குடிநீர், போலீஸ் பாதுகாப்பு, மருத்துவ உதவி, தங்குமிடம், போக்குவரத்து, தீயணைப்பு வசதிகள் நிறைவேற்ற அறநிலையத்துறை, வனத்துறை, மதுரை, விருதுநகர் கலெக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்துார் இலந்தைக்குளம் சுரேஷ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஸ்ரீவில்லிபுத்துார் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்திற்குட்பட்ட வனப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு வனத்துறையின் அனுமதியின்றி கட்டடங்கள், போர்வெல்கள், கிணறுகள் அமைத்துள்ளனர். கிணறுகளைஆழப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விதிமீறல் கட்டடங்களை அகற்ற உத்தரவிட வேண்டும். போர்வெல்கள், கிணறுகள் அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு அடுத்தவாரம் ஒத்திவைத்தது.