sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சாலைகளில் தடுப்புகளை அகற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

/

சாலைகளில் தடுப்புகளை அகற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சாலைகளில் தடுப்புகளை அகற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சாலைகளில் தடுப்புகளை அகற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


ADDED : ஆக 07, 2025 11:33 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சாலைகளில் முறையற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அழகேசன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் 2022 ல் 64 ஆயிரத்து 105 வாகன விபத்துகள் நடந்துள்ளன. 67 ஆயிரத்து 702 பேர் காயமடைந்துள்ளனர். 17 ஆயிரத்து 884 பேர் இறந்துள்ளதாக தேசியக் குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவிக்கிறது. வாகனங்களின் வேகத்தை குறைக்கும் நோக்கில் பல்வேறு சாலை சந்திப்புகளில் இரும்பு தடுப்புகளை (பேரிகார்டுகள்) போலீசார் அமைக்கின்றனர். இவை விபத்துகளை குறைப்பதற்கு பதிலாக, பல விபத்துகளுக்கு காரணமாகின்றன. இவை சாலையின் அகலத்தில் 80 சதவீத பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. எதிரே வாகனங்கள் வருவது தெரிவதில்லை.

தடுப்புகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான்கள் (ரெப்லக்டர்ஸ்) இடம்பெறுவதில்லை. சரியாக திட்டமிடாமல், அறிவியல்பூர்வமற்ற முறையில் அமைப்பதால் ஆபத்து ஏற்படுகிறது. அவசர காரணம் அல்லது போக்குவரத்து மாற்றத்திற்கு மட்டுமே தற்காலிகமாக தடுப்புகளை அமைக்க வேண்டும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் வழிகாட்டுதல் தெரிவிக்கிறது.

சாலைகளில் எந்த தடுப்புகளும் இருக்கக்கூடாது. தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலும்கூட, அவற்றில் எந்த விளம்பரமும் இடம்பெறக்கூடாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடுப்புகள் அமைப்பதை ஒழுங்குபடுத்த நிபந்தனைகளுடன் கூடிய வழிகாட்டுதல்களை டில்லி காவல்துறை உருவாக்கியுள்ளது. அதுபோல் தமிழகத்தில் விதிமுறைகளை உருவாக்கவில்லை. வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். சாலைகளில் முறையற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர், மாநில நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.






      Dinamalar
      Follow us