/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருச்சியில் ஆட்டோக்களுக்கு இடம் ஒதுக்க வழக்கு
/
திருச்சியில் ஆட்டோக்களுக்கு இடம் ஒதுக்க வழக்கு
ADDED : ஏப் 26, 2025 03:38 AM
மதுரை : திருச்சி ஆட்டோ தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் பொதுச் செயலாளர் கோபி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 300 பேர் ஆட்டோக்களை இயக்குகிறோம். திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. மே 9 ல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அங்கு ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க வலியுறுத்தி தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலர், கலெக்டருக்கு மனு அனுப்பினோம்.
பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு அதிகாரிகளிடம் விபரம் பெற்று அரசு வழக்கறிஞர் 8 வாரங்களில் தெரிவிக்க உத்தரவிட்டது.

