/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிடித்துச்செல்வது இரண்டை ; விட்டுச் செல்வதோ நான்கை மாநகராட்சி தமாஷால் தெருநாய்கள் குறையுமா: சூர்யாநகர் குடியிருப்போர் கேள்வி
/
பிடித்துச்செல்வது இரண்டை ; விட்டுச் செல்வதோ நான்கை மாநகராட்சி தமாஷால் தெருநாய்கள் குறையுமா: சூர்யாநகர் குடியிருப்போர் கேள்வி
பிடித்துச்செல்வது இரண்டை ; விட்டுச் செல்வதோ நான்கை மாநகராட்சி தமாஷால் தெருநாய்கள் குறையுமா: சூர்யாநகர் குடியிருப்போர் கேள்வி
பிடித்துச்செல்வது இரண்டை ; விட்டுச் செல்வதோ நான்கை மாநகராட்சி தமாஷால் தெருநாய்கள் குறையுமா: சூர்யாநகர் குடியிருப்போர் கேள்வி
ADDED : நவ 29, 2024 06:25 AM

மதுரை: ''தெருநாய்களை கட்டுப்படுத்தும் மாநகராட்சியினர் இரண்டை பிடித்துச் சென்றால், நான்கை விட்டுச் செல்வதால் நாய்கள் தொல்லை குறைவதில்லை'' என்று சூர்யாநகர் குடியிருப்புவாசிகள் குமுறுகின்றனர்.
மதுரை மாநகராட்சியின் 8 வது, 10வது வார்டு சூர்யா நகர் பகுதி. இங்குள்ள சுபாஷினி நகரில் 5 தெருக்கள், கே.வி.ஆர்., நகரில் 4 தெருக்கள், ஜெயின் நகர், ஜெய்மூகாம்பிகை நகரில் தலா ஒரு தெரு, கணேஷ் நகரில் 3 தெருக்கள், சூர்யா நகர், தாய் மூகாம்பிகை நகர் சேர்த்து 6 தெருக்கள் உள்ளன. 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் ஆண்டி, பொருளாளர் உதயகுமார், செயலாளர் தர்மலிங்கம், துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுரவ ஆலோசகர் துரைக்கண்ணு, செயற்குழு உறுப்பினர்கள் பாஷ்யம், ரவி, மாரிமுத்து, கருப்பையா கூறியதாவது:
எட்டாவது வார்டில் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளன. வடிகால் வசதி இன்றி, மழைக்காலத்தில் ரோடுகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுவதால் சிரமப்படுகிறோம். பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். எல்.இ.டி., தெருவிளக்குகள் அமைத்த பின்னும் வெளிச்சம் இல்லை. அதிக திறனுள்ள விளக்குகளை பொருத்த வேண்டும்.
பஸ் ஸ்டாப் தேவை
அழகர்கோவிலில் இருந்து வரும் திசையில் பஸ் ஸ்டாப் உள்ளது. புதுார் பகுதியில் இருந்து வரும் திசையில் பஸ் ஸ்டாப் அமைக்க வலியுறுத்தியுள்ளோம். பஸ் ஸ்டாப் எதிரே மெயின் ரோட்டில் டிவைடர் உள்ளதால் 500 மீ., சுற்றி வரவேண்டியுள்ளது. சிலர் அதனை தாண்டிச் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. டிவைடரை அகற்ற, உயர் கோபுர மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்வாய் அமைத்தல்
பறையாத்திகுளமே இப்பகுதியின் நீராதாரம். ஊமச்சிகுளம், ஆலாத்துார் வழியாக சிறுதுார் கண்மாய் நிரம்பி கால்வாய் மூலம் பாசன நீர் பறையாத்திகுளத்திற்கு வருகிறது. டான்பாஸ்கோ பள்ளி வரை மட்டுமே பொதுப்பணித்துறையால் சிமென்ட் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு குப்பை கொட்டுவதுடன், கழிவுநீர் கலந்து வருவதால் கண்மாய் மாசடைகிறது. பள்ளியில் இருந்து கண்மாய் வரை சிமென்ட் கால்வாய் அமைக்க வேண்டும்.
கண்மாயை துார்வாருங்கள்
கண்மாய் மறுகால் பகுதியில் கலுங்கு சேதமடைந்துள்ளது. முறையாக துார்வாராததால் கண்மாயில் நீரைத் தேக்க வழியில்லை. மறுகால் பாயும் இடத்தில் ஷட்டர் அமைக்க வேண்டும். கண்மாயின் வடக்கு பகுதியில் முட்புதர் அகற்றி, நடைப்பயிற்சிக்கு பேவர் பிளாக் அமைக்க வேண்டும்.
தெருநாய்கள் குறித்து புகார் அளித்தால் இரண்டை பிடித்துச் சென்று நான்கை விட்டுச் செல்கின்றனர். தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு புறம்போக்கு நிலத்தில் கலையரங்கம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

