நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் திருமங்கலம் ஆ. கொக்குளம் கே.பி ஒத்தப்பட்டியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
துணை இயக்குநர் பாபு தலைமை வகித்தார். உதவி இயக்குநர் எம்.எஸ். சரவணன், உதவி டாக்டர் மாணிக் சுந்தர், ஆய்வாளர் பாண்டிச்செல்வி கால்நடைகளுக்கான சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர். முகாமில் செயற்கை முறை கருவூட்டல் சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு சிறந்த கன்றுகள், கால்நடை வளர்ப்போருக்கு பரிசு வழங்கப்பட்டது.