/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலீசாரை விசாரிக்க சி.பி.ஐ., மனு தாக்கல்
/
போலீசாரை விசாரிக்க சி.பி.ஐ., மனு தாக்கல்
ADDED : ஆக 05, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரிலிருந்த நகை திருடுபோனது.
கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை ஜூன் 27ல் திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார்.
போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் கைதாகினர். சி.பி.ஐ., போலீசார் விசாரிக்கின்றனர். கண்ணன் உட்பட 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க மதுரை (சி.ஜெ.எம்.,) நீதிமன்றத்தில் சி.பி.ஐ.,தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி செல்வபாண்டி 5 பேரையும் இன்று (ஆக.,5) ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.