/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீபாவளி பட்டாசு கடை நடத்த போறீங்களா விதிமுறைகளை வெளியிட்டது போலீஸ்
/
தீபாவளி பட்டாசு கடை நடத்த போறீங்களா விதிமுறைகளை வெளியிட்டது போலீஸ்
தீபாவளி பட்டாசு கடை நடத்த போறீங்களா விதிமுறைகளை வெளியிட்டது போலீஸ்
தீபாவளி பட்டாசு கடை நடத்த போறீங்களா விதிமுறைகளை வெளியிட்டது போலீஸ்
ADDED : ஆக 05, 2025 06:55 AM
மதுரை : மதுரை நகரில் தீபாவளிப் பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிப்போர் இணையதளத்தில் கூறியுள்ள விதிமுறைப்படி படிவம் எண் ஏஇ 45 ஐ பூர்த்தி செய்து பின்வரும் ஆவணங்களுடன் செப்.4க்குள் நகர் போலீஸ் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
படிவத்துடன் ரூ.2 கோர்ட் பீஸ் ஸ்டாம்புடன் பூர்த்தி செய்து, 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை இணைக்க வேண்டும். இந்தாண்டுக்கான தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று வேண்டும். உத்தேசமான கடையின் வரைபடம் (2 வழிகளுடன்) வரைபடத்தில் கடையின் முகவரி முழுமையாக குறிப்பிடுவதுடன், மனுதாரர் கையெழுத்தும் இருக்க வேண்டும்.
உத்தேச இடத்தைச் சுற்றி 50 மீட்டருக்குள் இருக்கும் அமைவிடங்களை குறிக்க வேண்டும். கடைசொந்த கட்டடம் எனில் 2025 - 26க்கான முதல் அரையாண்டு வரை (ஆக.30) செலுத்திய சொத்து வரிரசீது, உரிமையாளர் சம்மதக் கடிதம், வாடகை கட்டடம் என்றால் மேற்கண்டவற்றுடன் கூடுதலாக வாடகை ஒப்பந்த பத்திரம் (ரூ.100 ஸ்டாம்ப் பேப்பரில் நோட்டரி பப்ளிக் ஒப்புதலு டன்), கடை அமையும் இடம் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, மற்ற துறைசார்ந்த கட்டடம் என்றால் அத்துறை அலுவ லரின் மறுப்பின்மை கடிதம்.
மாநகராட்சியின் நடப்பாண்டு டி அண்ட் ஓ ரசீது (டிரேட் ரசீது), ஏற்புறுதி ஆவணம் (ரூ.100 ஸ்டாம்ப் பேப்பரில் நோட்டரி பப்ளிக் ஒப்புதலுடன்), கடை அமையும் இடத்தின் போட்டோ 2 வெவ்வேறு கோணங்களில், ரூ.900 விண்ணப்ப உரிமக் கட்டணம் (திருப்பித் தரஇயலாது), விண்ணப்பதாரரின் ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை நகல்கள், அசல் விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களும் 3 நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
செப்.4 மதியம் 1:00 மணிக்குள் வழங்கும் விண்ணப்பம் மட்டுமே பரிசீலித்து உரிமம் வழங்கப்படும். சாலை ஓர கடைகளுக்கு காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது என, மதுரை நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.