ADDED : டிச 02, 2024 05:11 AM
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட (சி.பி.எஸ்.,) ஒழிப்பு இயக்கத்தின் உயர்மட்ட குழுக் கூட்டம் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் தலைமையில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் பேசினார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும். 2025 ஜூலையில் சென்னையில் தொடர் உண்ணாவிரதம், செப்.18ல் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம், அக். 16ல் மாவட்ட மறியல், நவ. 15ல் சென்னையில் பேரணி, டிச. 11 ஒருநாள் வேலை நிறுத்தம், 2026 ஜன. 21ல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. நிர்வாகிகள் செல்வகுமார், செல்வராஜ், புனிதன், சுரேஷ், பாலசண்முகம், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பேசினர். உறுப்பினர் சரவணன் நன்றி கூறினார்.