ADDED : ஜன 07, 2026 06:41 AM
திருமங்கலம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து, திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் நேற்று ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ., சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பா.ஜ., மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார்.
ஹிந்து முன்னணி நகரத் தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர் சரவணகுமார், மாவட்ட செயலாளர் சரவணன், கள்ளிக்குடி கிழக்கு மண்டல் தலைவர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பா.ஜ., வினர் கொண்டாட்டம் உசிலம்பட்டி: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்துாணில் விளக்கு ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு செல்லும் என அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து உசிலம்பட்டி தேவர் சிலை அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். கூட்டுறவு பிரிவு மாநிலச்செயலாளர் மொக்கராஜ், மாவட்டத் தலைவர் விஜேந்திரன், செயலாளர் தீபன்முத்தையா, கல்வியாளர் பிரிவு செயலாளர் பிரசாத்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

