ADDED : ஜன 07, 2026 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி. 1 கிலோ சர்க்கரை. ஒரு முழுக்கரும்பு,ரூ.3 ஆயிரம்வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு குடும்ப அட்டையில் உள்ள குடும்பஉறுப்பினர்கள்டோக்கனில் குறிப்பிடப்பட்ட நாளில் ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

