ADDED : ஜூலை 06, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் வைக்கம் சத்தியாகிரக வெற்றியின் நுாற்றாண்டு விழா நடந்தது. கல்வி அலுவலர் நடராஜன் வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி துணை முதல்வர் கபிலன் பேசுகையில்,''இளைஞர்கள் காந்தியின் வரலாற்றை படிக்க வேண்டும். குடும்பத்தில் சமுதாயத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு காந்திய சிந்தனை தீர்வாக அமையும். சத்தியாகிரகம் தான் உலகிற்கு வழிகாட்டும் தீர்வு என்பது தெளிவாகி இருக்கிறது'' என்றார்.
தமிழ்நாடு சர்வோதய மண்டலின் செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பேசினர். மேலுார் அரசு கல்லுாரி வரலாற்று துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் பாலாஜி நன்றி கூறினார்.