நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடனான சந்திப்பு கூட்டம் ஆரோக்கியா டிரஸ்ட், டி.வி.எஸ்., நிறுவனம் ஆதரவுடன் செயல்படும் கேரியர் கைடன்ஸ் சென்டர் சார்பில் நடந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் நடந்த இக்கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். வி.ஏ.ஓ., வெங்கடசுப்ரமணியன் தனியார் நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

