தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/‘சிங்கிள் விண்டோ போர்ட்டல்’ மூலம் எம்.எஸ்.எம்.இ.,க்கான சான்றிதழ்கள்: தொழிற்துறையினர் கோரிக்கை

‘சிங்கிள் விண்டோ போர்ட்டல்’ மூலம் எம்.எஸ்.எம்.இ.,க்கான சான்றிதழ்கள்: தொழிற்துறையினர் கோரிக்கை

‘சிங்கிள் விண்டோ போர்ட்டல்’ மூலம் எம்.எஸ்.எம்.இ.,க்கான சான்றிதழ்கள்: தொழிற்துறையினர் கோரிக்கை


UPDATED : அக் 07, 2026 07:11 PM

ADDED : அக் 07, 2026 07:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 07:11 PM ADDED : அக் 07, 2026 07:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ‘எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கான அனைத்து சான்றிதழ்களையும் ‘சிங்கிள் விண்டோ போர்ட்டல்’ மூலம் மட்டுமே பெற வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்,’ என தொழில்துறையினர் வலியுறுத்தினர்.

குறு, சிறு மற்றும் நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.,)தொழில் நிறுவனங்களை தொடங்க, அனைத்து துறை சான்றிதழ்களையும் ஒரே இணையதளத்தில் பெறும் வகையில் ‘சிங்கிள் விண்டோ போர்ட்டல்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பதிவு செய்தால் துறை சார்ந்த அதிகாரிகள் வேண்டுமென்றே சான்றிதழ் வழங்க மாதக்கணக்கில் இழுத்தடிக்கின்றனர் என தொழில்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: ‘சிங்கிள் விண்டோ’ இணையதளத்தில் பதிவு செய்த பின் எந்த துறையிடம் இருந்து சான்றிதழ் கிடைக்கவில்லை என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மாதந்தோறும் ஆய்வு செய்வர். அதன்பின், ஏதாவது ஒரு குறை சொல்லி அதை சரிசெய்ய கோரி நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்புகின்றனர். நேரடியாக துறை சார்ந்த இணையதளத்தில் விண்ணப்பித்து அதிகாரிகளை சென்று சந்தித்தால் சான்றிதழ் கிடைத்துவிடுகிறது.

நிறுவனங்கள் துவங்கும் போதே அனைத்து சான்றிதழ்களையும் பெற வேண்டியதில்லை என அ.தி.மு.க., ஆட்சியில் தொழில் கொள்கை உருவாக்கப்பட்டது. ஆனால் அரசாணை வெளியிடும் முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது தொழில் துவங்குவதற்கு முன், அனைத்து சான்றிதழ்களும் பெற வேண்டியுள்ளது.

வங்கிகளில் கடன் பெற்றால் தொழில் துவங்குவதற்கான குறிப்பிட்ட (இன்குபேஷன் பீரியட்) கால அவகாசத்திற்குப் பின் வட்டி கட்டவேண்டும். சான்றிதழுக்கே மாதக்கணக்கில் காத்திருப்பதால் உற்பத்தியை தொடங்காமலேயே வங்கிகளுக்கு வட்டி செலுத்தி நஷ்டத்தை சந்திக்கிறோம்.

எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கான அனைத்து சான்றிதழ்களையும் ‘சிங்கிள் விண்டோ போர்ட்டல்’ மூலம் மட்டுமே பெற வேண்டும் என்று அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். துறை சார்ந்த அனைத்து சந்தேகங்களையும் ஒரேமுறையில் தெரிவிக்க கோரி, துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த இரண்டையும் செயல்படுத்தினால் மட்டுமே 21 நாட்களுக்குள் நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கான அனைத்து சான்றிதழ்களும் பெற முடியும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us