/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காங்கேயம் காளை சிலை அமைக்கும் விவகாரம் தி.மு.க.,வினருக்கு சேர்மேன் சரமாரி கேள்வி

ADDED : டிச 01, 2024 01:49 AM
காங்கேயம் காளை சிலை அமைக்கும் விவகாரம்
தி.மு.க.,வினருக்கு சேர்மேன் சரமாரி கேள்வி
காங்கேயம், டிச. 1-
காங்கேயம் காளைக்கு சிலை அமைக்க வலியுறுத்தி, காங்கேயம் யூனியனில் தனி தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி, நவ.,27ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக, யூனியன் சேர்மேன் மகேஷ்குமார் அறிவித்தார். போலீசார் அனுமதி தராததால், உண்ணாவிரத போராட்டம் நடக்கவில்லை. இந்நிலையில் தன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கிய, காங்கேயம் ஒன்றிய, நகர தி.மு.க., செயலாளர்களுக்கு, மகேஷ்குமார் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: காங்கேயம் காளை சிலை அமைக்க, அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டதாகவும், கல்வெட்டில் என் பெயர் இடம்பெற வேண்டும் என்பதற்காகவும், போராட்டம் அறிவித்து,
அரசியல் செய்வதாக கூறுகின்றனர். நான் போராட்டம் அறிவிப்பதற்கு முன், அரசு அனுமதி வழங்கியதை நிரூபித்தால், அரசியலை விட்டு முழுமையாக விலக தயார். சிலை.காம் நிறுவனத்துக்கு, சிலை செய்ய வழங்கப்பட்ட உத்தரவை வெளியிட முடியுமா? எந்த துறை மூலமாக, எந்த திட்டத்தில், எந்த நிதியில் சிலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க தயாரா?. இவ்வாறு அவர் கூறினார்.