/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில்வே கருத்து கேட்புக்கூட்ட நடைமுறையில் மாற்றம்
/
ரயில்வே கருத்து கேட்புக்கூட்ட நடைமுறையில் மாற்றம்
ADDED : பிப் 05, 2024 12:32 AM
மதுரை : மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் பிப். 29 ல் நடக்க உள்ள கருத்து கேட்புக் கூட்டத்தில், கோரிக்கைகளை முன்வைத்து ஆலோசனை நடைபெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, ரயில்வே உட்கட்டமைப்பு, ஸ்டேஷன் நிறுத்தம், வணிகம் உள்பட சில கோரிக்கைகளை ஏற்கனவே முன்வைத்துள்ளார். அதில் செங்கேட்டை - தென்காசி இரட்டை பாதை கணக்கெடுப்பு, நெல்லை - செங்கோட்டை நடைமேடைகளை அதிகரித்தல், ஸ்டேஷன் நிறுத்த அடையாள காட்சி பலகை வைத்தல், ராமேஸ்வரம்- செங்கோட்டையில் இருந்து கோவைக்கு கூடுதல் ரயில்கள் இயக்குதல். தென்காசி வழியாக திருநெல்வேலி - பெங்களூரு சிறப்பு ரயில் இயக்குதல் குறித்து தெரிவித்துள்ளார்.,
மேலும் மதுரை-பெங்களூரு இடையே காலையில் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளதாக 2013ல் அறிவிப்பு வெளியானது. அது கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேறவில்லை. எனவே மதுரையிலிருந்து - பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும். கொங்கன் ரயில்வே தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் தமிழக மக்களுக்கு கொங்கன் ரயில்வேயின் பலன் கிடைக்கவில்லை.
திருநெல்வேலி - தென்காசி சந்திப்பு வழியாக தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும். தென்காசி வழியாக திருநெல்வேலி - பெங்களூரு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு முன் கருத்துகேட்பு கூட்டத்தில் கோரிக்கைகள் குறிப்பிடும் நிலையே இருந்தது. தற்போது கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகிறது என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

