/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
9 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்
/
9 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்
ADDED : நவ 13, 2025 12:59 AM
சென்னை: சென்னை ரயில் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடப்பதால், பல்வேறு விரைவு ரயில்களின் சேவையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அறிக்கை:
l சென்னை சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் கே.எஸ்.ஆர்., பெங்களூரு இரவு 10:50 மணி, சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு இரவு 11:00 மணி விரைவு ரயில்கள், வரும் 26ம் தேதி 2 மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்
l எழும்பூ ர் - மதுரை வைகை மதியம் 1:45 மணி விரைவு ரயில், வரும் 26, 27, 29 மற்றும் டிச., 1ம் தேதிகளில் 20 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்
l கேரளா மாநிலம், திருவனந்தபுரம் - தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் காலை 6:45 மணி ரயில் வரும் 17, 19, 21, 24, 26, 28, டிச., 1ம் தேதிகளில் மூன்று மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக செல்லும்
l போத்தனுார் - சென்னை சென்ட்ரல் மாலை 6:30 மணி ரயில், வரும் 21, 28ம் தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாக செல்லும்
l புதுச்சேரி - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா மதியம் 12:45 மணி ரயில், வரும் 24ம் தேதி 85 நிமிடங்கள் தாமதமாக செல்லும்
l சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி இரவு 11:50 மணி ரயில், வரும் 17ம் தேதி 25 நிமிடங்கள் தாமதமாக செல்லும்
l சென்ட்ரல் - ஆந்திரா மா நிலம் குண்டக்கல் இரவு 11:50 மணி ரயில், வரும் 19, 21ம் தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாக செல்லும்
l சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் மங்களூரு இரவு 8:10 மணி ரயில் வரும் 24ம் தேதி 15 நிமிடங்கள் தாமதமாக செல்லும்.
சூலுார் ரயில்கள் ரத்து சூலுார்பேட்டை ரயில் நிலையம் அருகில் இன்று, ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளது. இதனால், சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரத்து l சூலுார்பேட்டை - சென்ட்ரல் மாலை 6:40, சென்ட்ரல் - ஆவடி இரவு 9:25 மணி ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது
ஒரு பகுதி ரத்து l சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 10:15, பகல் 12:10, மதியம் 2:30 மணி ரயில்கள் எளாவூர் வரை மட்டும் இயக்கப்படும்
l சூலுார்பேட்டை - சென்ட்ரல் மதியம் 1:15, மாலை 3:10 மணி ரயில்கள், எளாவூரில் இருந்து இயக்கப்படும்
l சூலுார்பேட்டை - கடற்கரை மாலை 5:20 மணி ரயில் எளாவூரில் இருந்து இயக்கப்படும்
l சென்ட்ரல் - சூலுார்பேட்டை 3:30, 6:15 மணி ரயில்கள் கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

