UPDATED : அக் 29, 2026 11:12 PM
ADDED : அக் 29, 2026 11:09 PM
அ நிறம் | அளவு
மதுரை: தென்மேற்கு ரயில்வேயின் மைசூரு கோட்டத்திற்கும், பாலக்காடு கோட்டத்திற்கும் இடையேயான அதிகார வரம்பு மாற்றத்தின் காரணமாக, ரயில் எண்களில் மாற்றம் செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜன.1 முதல் மங்களூரு சென்ட்ரல் –- கன்னியாகுமரி 'பரசுராம்' ரயில் எண் 16249, கன்னியாகுமரி - –மங்களூரு சென்ட்ரல் 'பரசுராம்' ரயில் எண் 16250, மங்களூரு சென்ட்ரல் - –கோவை ரயில் எண் 16243, கோவை –- மங்களூரு சென்ட்ரல் ரயில் எண் 16244 என மாற்றம் செய்யப்படுகிறது.
ஜன.2 முதல் மங்களூரு சென்ட்ரல் - –ராமேஸ்வரம் வாராந்திர ரயில் எண் 16241, ஜன.3 முதல் ராமேஸ்வரம் - –மங்களூரு சென்ட்ரல் வாராந்திர ரயில் எண் 16242 என மாற்றம் செய்யப்படுகிறது.
