தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/புவிசார் குறியீட்டுக்கு மானியம்

புவிசார் குறியீட்டுக்கு மானியம்

புவிசார் குறியீட்டுக்கு மானியம்


UPDATED : அக் 29, 2026 10:48 PM

ADDED : அக் 29, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 10:48 PM ADDED : அக் 29, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: காப்புரிமை, லோகோ, புவிசார் குறியீட்டுக்கு செலவழித்த தொகையில் ஒருபகுதியை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான வளர்ச்சி மற்றும் வசதியாக்கல் அலுவலக (எம்.எஸ்.எம்.இ., டி.எப்.ஓ.,) உதவி இயக்குநர் ஜெயசெல்வம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

அறிவுசார் சொத்துரிமை தொடர்பாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்படும் பொருட்களுக்கு மத்திய அரசு காப்புரிமை (பேட்டர்ன்) எனப்படும் உரிமை சான்றிதழ் வழங்குகிறது. அதற்காக செலவழித்த தொகைக்கு அதிகபட்சமாக ரூ.ஒரு லட்சம் மானியம் பெறலாம். சர்வதேச அளவிலான காப்புரிமை சான்றிதழ் பெற்றிருந்தால் ரூ.5 லட்சம் பெறலாம். தனிநபரோ, நிறுவனமோ பதிவுச் சான்றிதழ் இருந்தால் மானியம் பெற தகுதியானவர்கள்.

நிறுவனம் நடத்தும் ஒருவர் புதிதாக லோகோ (வணிகக்குறியீடு) உருவாக்குவதற்கு புதிய டிசைன்களை உருவாக்கினால் ரூ.10ஆயிரம் வரை திரும்பப் பெறலாம். அந்த லோகோவையும் ஐ.பி.ஆர்., அலுவலகத்தில் பதிவு செய்தால் மற்றவர்கள் பயன்படுத்த முடியாது.

பண்ருட்டி பலா, மதுரை மல்லிகை, பால்கோவா என குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட பொருள் விளைவதால், தயாரிப்பதால் சிறப்புத்தன்மையுடையது. இதற்கு தனிநபர்கள் விண்ணப்பிக்க முடியாது. குழுவாகவோ, சங்கம் அல்லது கூட்டமைப்பு மூலம் விண்ணப்பித்தால் மட்டுமே புவிசார் குறியீடு பெற முடியும். இதற்கு ஆகும் செலவில் ரூ.2 லட்சம் வரை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us