UPDATED : அக் 30, 2026 12:21 AM
ADDED : அக் 29, 2026 10:43 PM

வாடிப்பட்டி: ''தனிச்சியம் ஊராட்சி செம்புக்குடிபட்டியில் ஆபத்தான மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தை அகற்ற வேண்டும்'' என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இங்குள்ள நாடகமேடை அருகே பல ஆண்டுகளுக்கு முன் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பின்றி கட்டடம் சேதமடைந்து பயன்படாமல் காட்சிப் பொருளாக மாறி வருகிறது. பல இடங்களில் விரிசல் விழுந்தும், காரை பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன.
ஜன்னல்கள், கதவுகள் துருப்பிடித்தும், 'பெயின்ட்' உரிந்து கருப்பு நிறமாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் இதனருகே அடிக்கடி கூடுகின்றனர். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. ஒன்றிய அதிகாரிகள் இதனை அகற்றி அரசின் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
