ADDED : டிச 15, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: துாத்துக்குடி ஸ்டேஷன் யார்டில் மழைநீர் தேங்கியதால்அங்கிருந்துபுறப்பட வேண்டிய மைசூரு(16235), முத்துநகர் (12694), பாலருவி(16791), மேட்டுப்பாளையம் (16766) ஆகிய ரயில்கள் மீளவட்டான்ஸ்டேஷனில்இருந்து நேற்று புறப்பட்டன.
துாத்துக்குடியில் இருந்து மாலை 6:25 மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி பாசஞ்சர் (06667), இரவு 10:30 மணிக்கு புறப்பட வேண்டியவாஞ்சி மணியாச்சிபாசஞ்சர் (06847),வாஞ்சி மணியாச்சியில் இருந்து இரவு 8:25 மணிக்கு புறப்பட வேண்டிய துாத்துக்குடி பாசஞ்சர் (06672) முழுமையாக ரத்து செய்யப்பட்டன.