ADDED : ஜூலை 31, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரைக் கோட்டத்திற்குட்பட்ட வாடிப்பட்டி - சோழவந்தான் இடையே பராமரிப்பு பணி நடப்பதால் முக்கிய ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆக. 1 (நாளை) முதல் 23 வரை (ஆக. 15 தவிர்த்து) கோவை - நாகர்கோவில் ரயில் (16322), திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். பயணிகள் வசதிக்காக மேற்கண்ட நாட்களில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06322), மதியம் 3:30 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு இரவு 9:05 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.
ஆக. 3, 6, 10, 13, 17, 20ல் மயிலாடுதுறை - செங்கோட்டை (16847), இன்று, ஆக. 7, 14ல் ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கட்ரா - திருநெல்வேலி (16788) ஆகிய ரயில்கள் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

