/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரோடு ஆக்கிரமிப்புகளால் பஸ் ரூட் மாற்றம் மலைப்பட்டி மக்கள் அவதி
/
ரோடு ஆக்கிரமிப்புகளால் பஸ் ரூட் மாற்றம் மலைப்பட்டி மக்கள் அவதி
ரோடு ஆக்கிரமிப்புகளால் பஸ் ரூட் மாற்றம் மலைப்பட்டி மக்கள் அவதி
ரோடு ஆக்கிரமிப்புகளால் பஸ் ரூட் மாற்றம் மலைப்பட்டி மக்கள் அவதி
ADDED : ஜன 21, 2024 03:42 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி புத்துார் மலையடிவாரத்தில் மலைப்பட்டி கிராமம் உள்ளது. போத்தம்பட்டி ஊராட்சிக்கு ஒரு பகுதியும், வடுகபட்டி ஊராட்சிக்கு ஒரு பகுதியுமாக இந்த கிராமம் பிரிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டியிலிருந்து கவண்டன்பட்டி, விளாம்பட்டி, மலைப்பட்டி வழியாக வேப்பனுாத்து வரை அரசு பஸ் இயக்கப்பட்டது.
இந்த ரோட்டில் பஸ்கள் எளிதாக சென்று வரமுடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகளால் பஸ் போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பிவிட்டுள்ளனர்.
அன்பு: பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் நடந்தோ அல்லது டூ வீலர்கள், ஆட்டோவில் தான் கிராமத்திற்கு வரவேண்டியுள்ளது. வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் பஸ் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
கிராமத்தில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் உசிலம்பட்டி -திருமங்கலம் செல்லும் பிரதான ரோடு உள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்து வண்டிப்பாதையாக பயன்படும் இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கையை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு தார் ரோடு அமைக்கும் பணி ஊராட்சி சார்பில் ஒரு கி.மீ., துாரத்திற்கு நடந்தது.
சிலர் தங்கள் பட்டா நிலத்தின் வழியாக ரோடு செல்வதாக கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் பாதியில் கைவிடப்பட்டது.
இந்த இணைப்பு ரோடு புதுப்பிக்கப்பட்டால் மலைப்பட்டி மக்கள் எளிதாக திருமங்கலம் ரோடு செல்ல முடியும்.
பேரையூர் ரோட்டில் இருந்து உசிலம்பட்டிக்கு வராமல் திருமங்கலம், மதுரை ரோடு செல்வதற்கான இணைப்பு ரோடாகவும் மாற வாய்ப்புள்ளது. அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

