/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பராமரிப்பு பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்
/
பராமரிப்பு பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்
ADDED : அக் 02, 2025 03:17 AM
மதுரை மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட சமயநல்லுார் - கூடல்நகர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் அக்., மாதத்திற்கான ரயில்கள் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது.
முழு ரத்து அக். 3, 6, 8, 9, 10, 13ல் ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11:40 மணிக்கு புறப்படும் மதுரை பாசஞ்சர் (56714) ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் வசதிக்காக மேற்கண்ட நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மாலை 6:00 மணிக்கு மதுரை வரும்.
பகுதி ரத்து அக்., 2 (இன்று) முதல் 30 வரை (செவ்வாய், அக். 18, 19, 20, 31 தவிர்த்து), ஈரோடு - செங்கோட்டை ரயில் (16845), திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். அக்., 3 முதல் 31 வரை (புதன், அக்., 19, 20, 21 தவிர்த்து) செங்கோட்டை - ஈரோடு ரயில் (16846) திண்டுக்கல்லில் இருந்து புறப்படும். மேற்கண்ட நாட்களில் இரு ரயில்களும் திண்டுக்கல் - செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன.
அக். 3, 6, 8, 9, 10, 13ல் திருச்சி - ராமேஸ்வரம் ரயில் (16849), மானாமதுரை வரை மட்டும் இயக்கப்படும். ராமேஸ்வரம் - திருச்சி ரயில் (16850) மானாமதுரையில் இருந்து புறப்படும். இரு ரயில்களும் மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன. அக். 7, 10, 13ல் கோவை - நாகர்கோவில் ரயில் (16322), திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.
மாற்றுப்பாதை அக்., 3 முதல் 31 வரை (அக். 8, 15, 19, 20, 21, 29 தவிர்த்து) செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் செல்லும்.
ஞாயிறு, வியாழக்கிழமைகளில் (அக். 19 தவிர்த்து) நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.எம்.டி., (16352), சனிக்கிழமை தோறும் இயக்கப்படும் கன்னியாகுமரி - ஹவுரா (12666) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் செல்லும்.
அக்., 2 முதல் 30 வரை (அக். 6, 7, 13, 14, 18, 19, 20, 28 தவிர்த்து), குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயில் (16128), வெள்ளிக் கிழமை தோறும் இயக்கப்படும் கன்னியாகுமரி - ஐதராபாத் சிறப்பு ரயில் (07229), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் செல்லும்.
அக்., 4ல் கோவை - நாகர்கோவில் - கோவை (16321/16322), நாகர்கோவில் - காச்சிகுடா (16354) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக மாற்றுப் பாதையில் செல்லும். அக். 4, 28ல் மயிலாடுதுறை- செங்கோட்டை (16847), அக். 26ல் பனாரஸ் - கன்னியாகுமரி (16368), அக். 12ல் காச்சிகுடா - நாகர்கோவில் (16353) ஆகிய ரயில்கள் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப் பாதையில் செல்லும். அக். 18, 25ல் நாகர்கோவில் - காச்சிகுடா ரயில் (16354), திண்டுக்கல், கரூர் வழியாக செல்லும். திருச்சி செல்லாது.
தாமதம் மதுரை - பிகானிர் ரயில் (22631), அக்., 9, 16ல் மதியம் 12:30 மணிக்கும், அக்., 23ல் மதியம் 1:05 மணிக்கும், அக்., 30ல் மதியம் 3:00 மணிக்கும் தாமதமாக புறப்படும். அக்., 3, 6, 8, 9, 10, 13ல் மதுரை - திண்டுக்கல் ரயில் (56704) மாலை 6:45 மணிக்கும், அக்., 4, 28ல் மதுரை - எழும்பூர் ரயில் (22672), மாலை 4:15 மணிக்கும், அக்., 4ல் மதுரை - திருவனந்தபுரம் ரயில் (16344), மாலை 4:30 மணிக்கும் தாமதமாக புறப்படும்.
சிறப்பு ரயில்கள் புதன் கிழமை மற்றும் அக்., 19, 20, 21 தவிர்த்து மற்ற நாட்களில் அதிகாலை 5:10 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், காலை 9:30 மணிக்கு மதுரை வரும்.
செவ்வாய் மற்றும் அக்., 18, 19, 20 தவிர்த்து மற்ற நாட்களில் மதுரையில் மாலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 10:30 மணிக்கு செங்கோட்டை செல்லும்.
இவ்விரு ரயில்களும் திருமங்கலம், விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக செல்லும்.