தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆணவக்கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை ரத்து

 ஆணவக்கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை ரத்து

 ஆணவக்கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை ரத்து


ADDED : செப் 30, 2026 03:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 03:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கவின், 27, என்பவர் வேறொரு சமூக பெண்ணை காதலித்து, 2025 ஜூலை 27ல் நெல்லையில் வெட்டி கொல்லப்பட்டார். காதலியின் தம்பி சுர்ஜித் கைதானார்.

காதலியின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி, உறவினர் ஜெயபால் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவில், 'வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய ஆதாரங்கள் தேவை. மனுதாரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லாததால், குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.

தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி, ஜெயபால் தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us