ADDED : செப் 29, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி சார்பில் உத்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நடந்தது.
பள்ளி முதுகலை ஆசிரியர் முரளிதரன் தலைமை வகித்தார். ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் கண்ணன் செய்திருந்தார். மரக்கன்றுகள் நடப்பட்டன. மரங்களை பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
