UPDATED : செப் 29, 2026 08:06 PM
ADDED : செப் 29, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை மாவட்ட நிர்வாகம், போலீஸ், சாலை பாதுகாப்புக் குழு சார்பில் மதுரை காமராஜ் பல்கலை வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பில், போதை இல்லாத தமிழகம், விபத்து இல்லாத மதுரை என்ற விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் பாண்டி வரவேற்றார். போலீஸ் எஸ்.பி.,தேவநாதன், மாணவரிடையே போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பேசினார். பல்கலை பதிவாளர் முத்து, மனநல மருத்துவர் சந்தோஷ்ராஜ், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் ராஜ்குமார், மதுவிலக்கு போலீஸ் வெங்கடேசன் உட்பட பலர் பேசினர். போதை தடுப்புக்குழு பேராசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.
