தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஊரக வளர்ச்சி அலுவலர்கள் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 29, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்கள், மற்றும் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இந்த போராட்டம் நடந்தது. உதவி இயக்குனர், கூடுதல் இயக்குனர் பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும். திட்ட அதிகாரியாக வனத்துறையின் ஐ.எப்.எஸ்., அதிகாரியை நியமித்ததை ரத்து செய்ய வேண்டும். மகளிர் திட்ட இயக்குனர் பணியிடத்தில் வங்கி அதிகாரியை பணியமர்த்தியதை கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது.

நகர் கிளையில் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். கிளை பொறுப்பாளர்கள் தங்கவேலு, குருசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் அமுதரசன் நன்றி கூறினார். மேற்கு ஒன்றியத்தில் மாநில செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us