
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை புதுார் லுார்தன்னை சர்ச் 105வது ஆண்டு பெருவிழாவையொட்டி திருப்பலி நடந்தது. மதுரை உயர் மறைமாவட்ட திருதுாது நிர்வாகி ஆயர் அந்தோணிசாமி சவரிமுத்து தலைமை வகித்தார்.
மிக்கேல் சம்மனசு ஆவைர் தேர், டான்போஸ்கோ தேர், சூசையப்பர் தேர், லுார்துமாதா தேர் உட்பட 5 தேர்கள் சர்ச்சிலிருந்து துவங்கி சந்தனமாதா தெரு, மாரியம்மன் கோவில் தெரு, மாதாகோவில், பாரதியார், அழகர்கோவில் மெயின் ரோடு வழியாக வலம் வந்தன. கல்லிடைகுறிச்சி வட்டார அதிபர் அந்தோணி, பாதிரியார் ஜார்ஜ், உதவி பாதிரியார்கள் பாக்கியராஜ், ஜஸ்டின், பிரபு, திருத்தொண்டர் அஜிலாஸ், சலேசியர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை அன்பிய பொறுப்பாளர்கள், பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

