/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சென்னை -- மதுரை இரவு விமான சேவை துவக்கம்
/
சென்னை -- மதுரை இரவு விமான சேவை துவக்கம்
ADDED : டிச 08, 2024 05:40 AM
அவனியாபுரம் : மதுரை விமான நிலையத்தில் டிச.,20 முதல் சென்னை - -மதுரை - -சென்னை இரவு நேர விமான சேவை துவங்குகிறது.
இவ்விமான நிலையத்திற்கு அக்.,1 முதல் 24 மணி நேரமும் விமானங்கள் வந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் இரவு நேர சேவையை எந்த விமான நிறுவனமும் பயன்படுத்தவில்லை.
இந்நிலையில் டிச., 20 முதல் இண்டிகோ விமான நிறுவனம் இரவு நேர சேவையை துவக்குகிறது. அன்று சென்னையில் இருந்து இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு இரவு 10:25 மணிக்கு மதுரை வந்தடையும். அதே விமானம் இரவு 10: 45 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை சென்றடையும். இதன் மூலம் சென்னை - மதுரை- - சென்னை 10 விமான சேவைகளில் 9 சேவையை இண்டிகோ வழங்குகிறது.