/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநில ஜூடோ போட்டிகள் சென்னை அணி சாம்பியன்
/
மாநில ஜூடோ போட்டிகள் சென்னை அணி சாம்பியன்
ADDED : ஜன 05, 2025 04:57 AM
பெருங்குடி : மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்த மாநில கேடட் ஜூடோ போட்டிகளில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழ்நாடு ஜூடோ அசோசியேஷன் சார்பில் நடந்த போட்டிகளில் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு வயது பிரிவுகளில் நடந்த போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 8 பேர், பெண்கள் பிரிவில் 8 பேர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. கரூர் மாவட்ட அணி 2ம் இடம் பெற்றது. வென்ற வீரர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, கல்லுாரி முதல்வர் வசந்தகுமார், இயக்குனர் ஜெகதீசன் பரிசு வழங்கினர். மாவட்ட ஜூடோ அசோசியேஷன் செயலாளர் புஷ்பநாதன் உட்பட நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.