/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செஸ் போட்டி: 3ம் இடம் பிடித்து மாணவர் சாதனை
/
செஸ் போட்டி: 3ம் இடம் பிடித்து மாணவர் சாதனை
ADDED : டிச 07, 2025 08:49 AM

சோழவந்தான்: நகரி கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி 11ம் வகுப்பு மாணவர் ஜெய்தம்பரிஷ் 'ஐ.எம் நார்ம்' செஸ் போட்டியில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில் கோவையில் 37வது 'ஐ.எம் நார்ம் குளோஸ்டு சர்க்யூட்' செஸ் போட்டி நடந்தது.
இதில் பெலாரஸ், கியூபா, அர்ஜென்டினா, கொலம்பியா, பெரு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ரேட்டிங் பெற்ற முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். ஆட்டத்திறனை சோதிக்கும் கடினமான இந்த உயர்நிலைப் போட்டியில் நிதானத்தையும் துல்லியமான நகர்வுகளையும் வெளிப்படுத்தி பல வலுவான வீரர்களை ஜெய்தம்பரிஷ் வென்றார். அவரை பள்ளித் தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

