/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'மொழி, மாநில உரிமைக்காக முதல்வர் போராடுகிறார்'
/
'மொழி, மாநில உரிமைக்காக முதல்வர் போராடுகிறார்'
ADDED : மார் 17, 2025 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை பழங்காநத்தத்தில் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தி.மு.க., இளைஞரணி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.
அதில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்திற்கு மத்திய அரசு அநீதி ஏற்படுத்த முயற்சிக்கிறது. மாநில உரிமையை மீட்டெடுக்க வேண்டிய முக்கிய காலகட்டம் இது. மத்திய அரசு நினைத்தபடி மறுசீரமைப்பு நடந்தால் தென் மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகள் குறையும். மாநில உரிமை பறிபோகும்.
தற்போது மொழித் திணிப்பையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மொழி, மாநில உரிமையை பாதுகாக்கும் போராட்ட களத்தில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்றார்.